கஜா புயல் யாழ்ப்பாணம் குடா நாட்டுக்குள் புகுந்து தாண்டவம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0 minute read
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கஜா புயல் காரணமாகத் தற்போது யாழ்ப்பாணம் குடாநாட்டில் கடும் காற்றுடன் மழை பெய்கின்றது.
கஜா புயல் யாழ்ப்பாணம் குடா நாட்டுக்குள் புகுந்து தாண்டவம் !
அதனால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு முடங்கி யுள்ளனர். நேற்று இரவு 8 மணியளவில் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. மழையும் பெய்யத் தொடங்கியது.

காங்கேசன் துறை, காரைநகர், வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிக மானதாகக் காணப்பட்டது.

கொரோனா உணர்த்தும் மோசமான அறிகுறி... அசால்டா இருக்காதீங்க !

வடமராட்சியில் பலத்த காற்று மற்றும் மழையால் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது. நாளை அதிகாலை காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

மணிக்கு 80 முதல் 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Tags:
Today | 6, April 2025