கோவையில் யானை தாக்கி அப்பள கம்பெனி உரிமையாளர் பலி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1 minute read
கோவை கணுவாய் மற்றும் தடாகம் பகுதிகளில் அண்மை காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மக்கள் வாழும் பகுதிக்குள் நடமாடும் அந்த யானைகள், ஊருக்குள் வந்து தோட்டங்களில் உள்ள வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் இன்று மாலை தாய் யானை ஒன்று தனது குட்டி யானையுடன் வந்துள்ளது. 
இதனை கண்ட அப்பகுதி மக்கள் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரட்ட வந்தவர்களை திடீரென யானை துரத்த துவங்கி யுள்ளதால் அனைவரும் சிதறி ஓடினர். 

அப்படி ஓடும் தருனத்தில் அப்பள கம்பெனி உரிமையாளர் செல்வம், யானையிடம் சிக்கி யுள்ளார். 
இதையடுத்து, யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த செல்வத்தை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவரை அனுமதித் துள்ளனர். 
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந் துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
Tags:
Today | 4, April 2025