ஒரே நேரத்தில் 350 பேருக்கு பாஸ்தா விருந்து !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0 minute read
பொலிவியா நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாஸ்தா என்ற துரித உணவு ஒரே நேரத்தில் 350 பேருக்கு பரிமாறப் பட்டது. 
ஒரே நேரத்தில் 350 பேருக்கு பாஸ்தா விருந்து !
லா பாஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களை குடும்பத்துடன் ஒருங்கிணைத்து குடும்ப விழாவை ஏற்பாடு செய்தது. 

அப்போது விருந்து படைக்க அந்நாட்டின் புகழ்பெற்ற துரித உணவான பாஸ்தாவை தேர்வு செய்தது. இதற்காக மிகப்பெரிய பாத்திரத்தில், பாஸ்தா, நூடூல்ஸ், காய்கறிகள், இறைச்சி என சமைக்கப் பட்டது. 
பின்னர் மணக்க மணக்க பரிமாறப்பட்ட பாஸ்தாவை அவர்கள் ரசித்து ருசித்தனர். மிகக்குறுகிய நேரத்தில் சிறிய அளவில் பாஸ்தா செய்வது வழக்கம். 

ஆனால், ஒரே நேரத்தில் 350 பேருக்கு பாஸ்தாவை சமைத்தது உலகிலேயே இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும் என்று லாபாஸ் நகர சமையல் கலைஞர்கள் கூறுகின்றனர்.
Tags:
Today | 31, March 2025