கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது, மெய்யாத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்தது,
அந்த பகுதியில் இருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மகளின் நிலைமையை பார்த்து பதறிய, அவரது தாயார், இது குறித்து விசாரித்த போது, விளத்தூர் என்ற மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவர்தான்,
அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார் என்ற பயங்கர உண்மை வெளியானது. சிறுமியின் தாயார், அருகில் உள்ள சேத்தியாத் தோப்பு போலீசாரிடம் புகார் தெரிவிக்க, கையும் களவுமாக ராகுலை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை கர்ப்பமாக்கி, குழந்தை பெறச் செய்த ராகுல் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சிறுமிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது கிராமத்தி னரின் கோரிக்கை.
இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த அந்த 16 வயது சிறுமி, கைக்குழந்தை யுடன் அரசு மருத்துவ மனையில் பரிதவித்து நிற்பது, சோகத்தை ஏற்படுத்து கிறது.