லிப்ட்டில் வந்த பெண்ணிடம் சில்மிஷம், பெண் எடுத்த அதிரடி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1 minute read
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 
இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பள்ளி , கல்லூரி, வேலைக்கு செல்லும் இடங்கள் மற்றும் இன்றி பொது இடங்களிலும் பெண்களுக்கு வன்முறைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.
அதை தடுக்க அரசு சார்பில் எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும், பெண்கள் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

சீண்டல்கள் ஓய்ந்த பாடும் இல்லை. இந்நிலையில் சீனாவில் லிப்டில் தனியாக வந்த பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் பாலியல் சீண்டல்கள் கொடுக்க முயற்சி செய்கிறார். 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை சரமாரியாக அடித்து தாக்குகிறார். இதில் அவர் சுருண்டு ஒரு ஓரமாக விழுகிறார்.

பின் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார். 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் எல்லா பெண்களும் இவ்வாறு தான் தைரியமாக இருக்க வேண்டும் என அந்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே இருக்கிறது'
Tags:
Today | 5, April 2025