தண்டவாளம் அருகே தசரா கொண்டாடியவர்கள் மீது ரயில் மோதி 50 பலி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தண்டவாளம் அருகே தசரா கொண்டாடியவர்கள் மீது ரயில் மோதி 50 பலி !
அமிர்தசரஸ் நகரின் ஜோரா பஜார் என்ற இடத்தில் தசரா விழா நடைபெற்றது. அங்குள்ள தண்டவாளத்தின் அருகே உள்ள மைதானத்தில் ராவணன் உருவ பொம்மையை எரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டினர்.

தண்டவாளங்களின் மறு பக்கத்தில் ராவணன் பொம்மை எரிக்கப்பட்டது.
இதனை காண தண்டவாளத்தின் இரு பக்கத்திலும் உள்ள காலி இடத்தில் ஏராளமானவர்கள் கூடி இருந்தனர்.

அவர்களில் பலர் தண்டவாளத்திலும் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் வழியாக ஜலந்தர் செல்லும் ரயில் சென்றது.

எஸ்ப்ரஸோ பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை !

ராவணன் உருவ பொம்மை எரிந்த போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால், ஏற்பட்ட ஒலியால் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ரயில் வரும் ஓசை கேட்கவில்லை.

இதனால் தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி தள்ளி விட்டு சென்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று காயமடைந்த வர்களை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் பலியானோரு க்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாநில உள்துறை செயலாளரை உடனடியாக விபத்து நேரிட்ட இடத்திற்கு அனுப்பி உள்ள அவர், காயமடைந் தோருக்கு அரசு

பப்பட் ஃபிளிட்டர்ஸ் செய்வது எப்படி?

மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தி னருக்கு தலா 5 லட்ச ரூபாய் அளிக்கவும் உத்தர விட்டுள்ளார்.

விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்து செய்தி தம்மை உலுக்கி விட்டதாக கூறியுள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந் தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்குமென கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags: