நொடியில் உயிர் தப்பி கதிகலங்க வைத்த நபர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1 minute read
மனிதனாக பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் தோன்றும். 
தன்னுள் இருக்கும் திறமையை உலகிற்கு வெளிகாட்ட சில சாகசங் களையும், உயிர் போகும் சாதனை களையும், ஆபத்தையும் எடுத்து பிரப லமாவார்கள். 

அந்த வகையில் அமெரிக்காவில் நடக்கும் "American Got Talent" என்ற நிகழ்ச்சியை போன்று, 

இங்கிலாந்தில் தனியார் தொலைக் காட்சி நடத்தப்பட்டு வருவது "Britain’s Got Talent" என்ற மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி. 

இந்நிகழ்ச்சி யில் கடந்த வார நிகழ்ச்சியில் 43 வயதான மேட் ஜான்சன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். 
அவர் எப்படி பட்ட சாகசத்தை செய்ய போகிறேன் என்று கூறியதும் நிகழ்ச்சியின் நடுவர்கள் அதிர்ந்து போனார்கள். 

பூட்டுக்களால் மூடப்பட்ட சிறு தண்ணீர் தொட்டியில் மூழ்கி அதனுள் இருக்கும் சாவியை கொண்டு 2.10 நிமிடத்தில் திறந்து தப்பிக்கும் காட்சி, அரங்கத்தில் இருந்த அனைவரையும் பயத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தியது.
Tags:
Today | 5, April 2025