தலைவிரி கோலத்தில் இளம் பெண்கள் - கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி காட்சி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஆவடியில் நீட் தேர்வு எழுதும் மாணவிக ளிடம் தலை முடியை அவிழ்க்க சொல்லுதல் உள்ளிட்ட அதிக நெருக்கடி கொடுப்ப தாக பெற்றோர்கள் வேதனை யுடன் கவலை வெளியிட் டுள்ளனர்.
சென்னை ஆவடி கேந்திரிய வித்தியாலயா உள்ளிட்ட மூன்று மையங் களில் சுமார் 1800 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இது தவிர்த்து கொரட்டூரில் இரண்டு இடங்களிலும், திருவேற் காட்டில் ஒரு மையத் திலும் தேர்வு நடை பெற்று வருகிறது.

தேர்வுக்கு வரும் மாணவ மாணவியர் களிடம் ஆடைகள் பரிசோதிப்பது, தலைமுடி பின் காட்டுவது, 

கையில் கயிறு அறுத்து சோதிப்பது போன்ற அதிக நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் வேதனை யுடன் தெரிவிக் கின்றனர்.

மேலும் மாணவிகள் தலையில் அணிந்து வரும் க்ளிப், பேண்ட் போன்ற வற்றிக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனை அணிந்து வரும் மாணவிகள் அதனை அகற்றிய பிறகு தான் தேர்வு மையத்தி ற்குள் அனுமதிக்கப் படுகின்றனர்.

அதே போல் ஜலதோஷம் உள்ள நபர்கள் கூட கையில் கர்சீப் கொண்டு செல்ல கூடாது என்றும் தங்கள் அணிந்து இருக்கும் துணியிலேயே துடைத்து கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக நெருக்கடிகள், அலைக் கழிப்புகள், அவ மானங்கள், அச்சம், பதற்றம், குழப்பம் என பல வகையிலும் இன்னல்கள் மாணவ, மாணவிகள் கழுத்தை இறுக்கி நெருக்கி தள்ளி கொண்டிருக் கின்றன.

பணத்தை கொட்டி படிக்க வைத்த தம் செல்ல மகள், இன்று தலைவிரி கோலமாக தேர்வு எழுத செல்வதை பார்த்து கொண்டிருப்பது வேதனை என்றும் கண் கலங்கிய வண்ணம் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
Tags: