திருடனை பிடித்து தந்த சிறுவனுக்கு மெக்கானிக் வேலை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அண்ணா நகர் பகுதியில் பெண் மருத்துவர் 
ஒருவரது கழுத்துச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினான் திருடன் ஒருவன். அப்போது அந்தப் பக்கமாக வந்த சிறுவன் சூர்யா, துணிச்சலுடன் ஓடிச் சென்று அந்தத் திருடனை 
மடக்கிப் பிடித்ததோடு அவனது கையில் இருந்த சங்கிலியை யும் மருத்துவருக்கு மீட்டுக் கொடுத்தார். 

இதன் காரணமாக அப்போதே காவல் துறையினர் சிறுவன் சூர்யாவை அழைத்துப் பாராட்டி பரிசுகள் வழங்கிய போதும் சூர்யாவுக்கென ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. 

ஏழைச் சிறுவனான சூர்யாவுக்கு தானும் படித்தவர் களைப் போல ஷர்ட், பேண்ட் அணிந்து கொண்டு 

அலுவல கத்துக்குச் சென்று பணிபுரிய வேண்டும் என்பது தான் அந்த ஏக்கம். சிறுவன் சூர்யாவின் அந்த ஏக்கம் தற்போது நிறை வேறியிருக் கிறது. 
அதற்கான மூலகாரணம் சிறுவன் ஏப்ரல் மாதத்தில் திருடனை மடக்கிப் பிடித்த சாகஸக் கதை தான். 
சூர்யாவைப் பற்றிக் கேள்விப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று அவருக்கு ஏ.சி மெக்கானிக் காக தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கி யிருக்கிறது. 

இது நிரந்தர வேலை வாய்ப்பு என்பதால் சிறுவன் சூர்யா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Tags: