கேரளாவில் உள்ள கோலார் தங்கவயல் சபரிமாலா !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கர்நாடக மாநிலத்தின் தென் கிழக்குப் பகுதியில் கோலார் தங்க வயலில் தான் முன்பு இந்தியாவின் மொத்த தங்க உற்பத்தியில் 95 சதவிகிதத்தி ற்கும் அதிகமான தங்கம் கிடைத்தது. 
கோலார் தங்கவயல்
பின்னர் சுரங்கங்களின் வளம் குன்றின.கோலார் தங்கச் சுரங்கம் திப்பு சுல்தான் மற்றும் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1880ம் ஆண்டில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் என்ற நிறுவனம் இங்கு சுரங்கம் தோண்டத் தொடங்கியது.

1956ம் ஆண்டில் மைசூர் அரசு இந்த தங்கச் சுரங்கத்தை அரசுடமை யாக்கி, பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என்ற பெயரைச் சூட்டியது.

கடந்த 135 ஆண்டுகளில் இங்கு தோராயமாக 800 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப் பட்டுள்ளது.

இங்கு தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் களில் பெரும் பாலானோர் தமிழர்கள்.
இங்கு தங்கம் உள்ளதாகக் கண்டறியப் பட்ட 26 பகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே இதுவரை தங்கம் தோண்டப் பட்டுள்ளது.

பாரத தங்கச் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான நகரக் குடியிருப்பு 12,500 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. இது ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளது.

இதில் 12,000 குடும்பங்கள் வசிக்கும் 3753 ஏக்கர் நிலமும் 6204 ஏக்கர் காலி இடமும் 177 ஏக்கர் கழிவுகள் குவிக்கப் பட்டுள்ள இடமும் அடங்கும்.

பாரத தங்கச் சுரங்க நிறுவனத்தின் நகர குடியிருப்புக்குள் உள்ள கழிவுகளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி ஆகும். 
அதாவது இதில் ஒரு டன் கழிவில் 0.5 முதல் 1 கிராம் வரையிலான தங்கம் உள்ளது. இதை ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைமுறை யில் உள்ள நவீன முறைகளில் பிரித்து எடுக்கலாம். 

ஒரு கிராம் எடையுள்ள ரூ.400 மதிப்புள்ள தங்கத்தை எடுக்க ரூ.1000 செலவிடப் படுவதாகக் கூறி 2001ம் ஆண்டு இந்த தங்கச் சுரங்கம் மூடப்பட்டது.

73 கி.மீ. நீளமுள்ள தங்கப் படுகையில் 3.2 கி.மீ. ஆழமுள்ள தங்கச் சுரங்கங்களில் இப்போது தண்ணீர் தேங்கி யுள்ளது.

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள தால், இந்த சுரங்கத்தை மீண்டும் திறக்க திட்டமிடப் பட்டுள்ளது. எப்படி இதை இயக்குவது என்பது குறித்து மத்திய அரசும் நீதிமன்றங் களும் ஆலோசித்து வருகின்றன.
Tags: