தமிழகத்தில் முதன் முறை பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய ரோபோட் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணத்தில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய ரோபோட் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. 
தமிழகத்தில் முதன் முறை பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய ரோபோட் !
கும்பகோணம் நகராட்சியில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இந்த ரோபோட்டை இந்தியன் ஆயில் நிறுவனம் 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கி கொடுத்துள்ளது. 

இந்த ரோபாட்டின் பயன்பாடு திருப்திகரமாக இருந்தால் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்று கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. 
இருப்பினும் இன்று வரை மனிதர்களை கொண்டு பாதாள சாக்கடை அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த அவலத்தை போக்கவே ரோபோட் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது
Tags: