அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட பொறியியலாளர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா (32). இவர் அமெரிக்கா வின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். 
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட பொறியியலாளர்

கடந்த 22-ந் தேதி கன்சாஸ் புறநகர் பகுதியான ஓலாகேவில் பாருக்கு ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா தனது நண்பர்களுடன் சென்றார். 

அப்போது அமெரிக்கர் ஒருவர் ஸ்ரீனிவாஸ் குச்சி போட்லாவிடம் தகராறு செய்து, தங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறி துப்பாக்கி யால் சுட்டார். 
இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் ஹெச்.பி. விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளார். 

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர் களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தான் இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 

இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட என்ஜினீயர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா உடல் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

அங்கிருந்து அவரது சொந்த ஊராக பச்சுபள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகன் உடலை பார்த்து தாய் வர்தினி கதறி அழுதபடி மயங்கி விழுந்தார். 

ஸ்ரீனிவாசனின் உடலுக்கு பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். 
அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

இறுதி ஊர்வலத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பொது மக்கள் கண்டன கோ‌ஷம் எழுப்பினர்.
Tags: