பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட பெண் - டிரைவர் சஸ்பெண்ட் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1 minute read
எப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிரு க்கும் சமூக வலைத் தளத்தின் தற்போதைய டிரெண்டிங் டெல்லியில் பேருந்துக்குள் இளம் பெண் நடனமாடும் வீடியோ வெளியானதை அடுத்து அதன் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட பெண் - டிரைவர் சஸ்பெண்ட் !
கடந்த 12 ஆம் தேதி டெல்லி நகர அரசு பேருந்துக்குள் இளம் பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து டிப்போவிற்கு செல்லும் வரை அவர் இறங்க வில்லை. 
டிப்போ சென்ற போது திடீரென்று அவர் நடனமாட தொடங்கினார். டைட்டாக உடையணிந்து நடனமாடி கொண்டிருந்தார். 

அவரை கண்டிக்க வேண்டிய நிலையி லிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மார்ஷல் ஆகியோர் 

கண்டிக்காமல் அவருடைய நடனத்தை ஆவென வேடிக்கை பார்ப்பது போன்றும் வீடியோ வெளியாகி ட்ரெண்ட்டாகி உள்ளது.. 

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். நடத்துனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. 
மார்ஷல் பொது மக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பப் பட்டார். பொதுச் சொத்தை அங்கீகரிக் கப்படாத செயலுக்கு அனுமதித்தது, 

அதன் மூலம் டெல்லி போக்கு வரத்துக்கு கழகத்தின் கண்ணி யத்தைக் கெடுத்தது என அவர்கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
Tags:
Today | 4, April 2025