காவல்துறைக்கு சைக்கிள் வழங்கிய தமிழ்நாடு அரசு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாநிலத்தின் அமைதியை பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, 
குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளி களை கண்டு பிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க புதிய காவல் நிலையங்கள் 

மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவல கங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துதல், 
சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் & எரி சாராயம் !
ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங் களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங் களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

சென்னை பெருநகர காவல்துறையின் ரோந்துப் பணியினை மேம்படுத்தவும், மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும், குறுகலான தெருக்களிலும் ரோந்து பணியினை தீவிரப் படுத்தும் வகையிலும், 

ஜி.பி.எஸ் கருவிகள், மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலை தொடர்பு கருவிகள் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகிய வற்றை 
பெண்களுக்கு 'அந்த' இடத்தில் துர் நாற்றம் நீங்க?
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே வழங்கி யுள்ளதன் காரணமாக சென்னை பெருநகர காவல் துறையினர் ரோந்துப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். 
சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேலும் மேம்படுத்தும் வகையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 இருசக்கர வாகனங் களையும், 

250 மிதி வண்டிகளையும் முதல் -அமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த ரோந்து பணியில் ஈடுபடும் சென்னை பெருநகர காவல் துறையின் ரோந்து காவலர் களுக்கு, தனிப்பட்ட முறையில் வடிவமைக் கப்பட்ட மேல்சட்டை, தலைக் கவசம் ஆகியவை வழங்கப் பட்டுள்ளன. 

இருசக்கர வாகனங் களிலும், மிதி வண்டிகளி லும் ஒலி எழுப்பான்கள், எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. 
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள !
இதன் மூலம் ரோந்து காவலர்கள் குறுகிய தெருக்களி லும், மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளிலும் ரோந்து பணிகளை மேற்கொள்ள இயலும். 

போக்கு வரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் முறையினை மேலும் நவீனப் படுத்தும் வகையில், 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் பயன் பாட்டிற்காக, 1 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 உயர்ரக மின்னணு ரசீது கருவிகளை 

வழங்கும் அடையாள மாக 5 போக்கு வரத்து காவலர் களுக்கு முதல் -அமைச்சர் ஜெயலலிதா இன்று உயர்ரக மின்னணு ரசீது கருவிகளை வழங்கினார். 
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங் களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தின் கீழ் 

ஏற்கெனவே 300 மின்னணு ரசீது வழங்கும் கருவிகள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக வழங்கப் பட்டுள்ளன. 
செயற்கை மார்பக சிகிச்சை - மோசமான விளைவுகள் !
அத்துடன் இன்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வால் வழங்கப்பட்ட 100 உயர்ரக மின்னணு ரசீது கருவிகள் மூலம் 

சென்னை பெருநகர போக்கு வரத்து காவல் துறையினர் தங்கள் பணியினை மேலும் செம்மையாக செய்ய இயலும். 

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இராமமோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, 

காவல்துறை தலைமை இயக்குநர் அசோக்குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது
Tags: