திருவான்மியூர் பகுதியில் ஆம்னி வேனை திருடிய இருவர் கைது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1 minute read
சென்னை திருவான்மியூர் பகுதியில் காரை திருடிய 2 போதை ஆசாமிகள் கைது செய்யப் பட்டிருக் கின்றனர். 
திருவான்மியூர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் வசிப்பவர் தேன்மொழி.. தனியார் நிறுவன ஊழியரான இவரது மாருதி ஆம்னி வேன், திங்கட்கிழமை திருடு போனது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார், காரை கடத்திச் சென்றவர் களை தேடி வந்தனர். 
இந்நிலையில், பழ வந்தாங்கல் சிக்னல் அருகில் இரண்டு நபர்கள் போதையில் காரை சாலையில் இருக்கும்

தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்படுத்து வதாக பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், அவர்களை பிடித்து விசாரித்த போது, போதை ஆசாமிகள் இருவரும் 
திடீர் நகர் பகுதியை சேர்ந்த அய்யானர் மற்றும் சரன்ராஜ் என்பதும், திருவான்மியூரில் காணாமல் போன காரை இவர்கள் திருடி யிருப்பது தெரிய வந்தது. 

அவர்களிடம் இருந்து மாருதி ஆம்னியை மீட்ட திருவான்மியூர் போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:
Today | 6, April 2025