இந்தியாவில் ஆதார்-ன் முக்கியத்துவம் மிகவும் அதிகமாகி விட்டது, ரேஷனில் அரிசி வாங்குவது முதல் பாஸ்போர்ட் வாங்கும் வரை அனைத்திற்கும் ஆதார் கட்டாயம்.
இந்நிலையில் அரசு சேவைகள் பலவற்றுக்கு ஆதார் ஓடிபி கேட்கப் படுகிறது. அது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப் படும்.
இதில் சில நபர்கள் ஓடிபி-ஐ பெறுவதற்குச் சிரமப்படு கிறார்கள். இதற்கு முக்கியக் கரணம் மொபைல் டவர் பிரச்சனையாக இருக்கலாம்.
இதைச் சீர் செய்ய ஆதார் ஆணையம் எம்-ஆதார் (m-aadhaar) எனும் செயலியை அறிமுகம் செய்து உள்ளது.
இந்தச் செயலி மூலம் டி ஓடிபி-யை (TOTP) பெறலாம். இந்த ஓடிபி 30 நொடிகளு க்குத் தான் ஏற்றுக்கொள்ளப்படும்,
தவறினால் மீண்டும் சிறிது நேரம் கழித்து முதலில் இருந்து துவங்க வேண்டும். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளக் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.